ரூ.619 கோடி மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்!

358

புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 619 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்க வளாகத்தில், தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து, விழாவில் 619 கோடி மதிப்பிலான காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.