இந்தியாவில் இறைச்சிப் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல அமைப்பான பீட்டா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.

183

இதுதொடர்பாக  பீட்டா அமைப்பின் இந்தியப் பிரிவின் தலைவர் பூர்வா ஜோஷிபுரா, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.  இந்தியாவில் சைவ உணவு உண்ண ஊக்குவிக்க, மக்களிடம் மத்திய அரசு மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது. இறைச்சிப் பயன்பாட்டை 50% அளவுக்கு குறைக்க சீனா திட்டமிட்டுள்ளதை போல் இந்தியாவும் இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் விலங்குகளின் உயிர்கள் காக்கப்படுவதுடன், இதய நோய்களையும், சில வகையான புற்றுநோய்களையும் தவிர்க்கலாம். இதனால் வெளியேற்றப்படும் கரியமில வாயுவின் அளவு பெருமளவு குறையும். எனவே இந்தியர்களும் சைவ உணவுப் பழக்கத்துக்கு மாற, உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.