இந்திய ராணுவ முகாம் மீது அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும் – நிர்மலா சீதாராமன்..!

869

இந்திய ராணுவ முகாம் மீது அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதில் சொல்லியே ஆக வேண்டும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.ஜம்முவில் சன்ஞ்வான் ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து, ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ராணுவ வீரர்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தீவிரவாதிகள் தாக்குதலுக்குள்ளான கர்ப்பிணி பெண் நேற்று ராணுவ மருத்துவமனையில் குழந்தை பெற்றார் அவரை நிர்மலா சீதாராமன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் காஷ்மீர் முதலமைச்சர் மெகபூபா முப்தியை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதிகள் 4 பேர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறினார். இதில், மூன்று பேர் கொல்லப்பட்டு விட்டதாக கூறிய நிர்மலா சீதாராமன், ஒருவரை தேடும் பணி நடைப்பெற்று வருவதாக தெரிவித்தார். இந்த அத்துமீறல் தாக்குதலுக்கு பாகிஸ்தான் நிச்சயம் பதில் சொல்லி ஆக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.