காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

233

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்திய ராணுவத்தின் சர்ஜிகல் தாக்குதலைத்தொடர்ந்து, காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு தக்க பதிலடியை தொடர்ந்து இந்திய ராணுவம் கொடுத்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற போரில் அப்பாவி பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், பல்லன்வாலா பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி இந்திய வீரர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அக்னூரில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு, இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால், காஷ்மீர் எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.