நடுவானில் எரிபொருள் வசதி கொண்ட விமானத்தின் பரிசோதனை வெற்றி!

831

நடுவானில் விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் முயற்சியில் இந்திய விமானப் படையினர் வெற்றி பெற்றுள்ளனர்.
பல நாடுகளின் விமானப் படையில் நடுவானில் எரிபொருள் நிரப்பும் வசதி கொண்ட விமானங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவில் அது போன்ற விமானங்கள் விமானப்படையில் இல்லை. இதற்கு தீர்வு காணும் பொருட்டு எரிபொருள் வசதி கொண்ட போர் விமானத்தை பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சித் துறையினர் வடிவமைத்தனர். இதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.