இந்திய விமானப்படையின் 85 வது ஆண்டு விழாவை முன்னிட்டு விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

238

இந்திய விமானப்படையின் 85 வது ஆண்டு விழாவை முன்னிட்டு விமானப்படை வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு மற்றும் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய விமானப்படை தொடங்கி இன்றுடன் 85 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து 85 வது ஆண்டுவிழா நிகழ்ச்சி உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்றது. பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாரமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான விமானப்படை வீரர்கள் கலந்துகொண்ட அணி வகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அத்துடன் விமானப்படை வீரர்களின் விமான சாகசங்கள் பார்வையாளர்களை மெய்மறக்க செய்தன.