இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையே கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்ஆஸ்திரேலிய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

514

பிசிசிஐ தலைவர் லெவன் அணி எதிரான பயிற்சி ஆட்டத்தில், ஆஸ்திரேலிய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சென்னையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கிரிக்கெட் பயிற்சி ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டேவிட் வார்னர் 64 ரன்களும், ஸ்டீவன் ஸ்மித் 55 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 347 ரன்களை ஆஸ்திரேலியா குவித்தது.
கடினமான இலக்கை எதிர்கொண்ட லெவன் அணி ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை இழந்து வந்தது. ராகுல் திரிபாதி 7 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி அசத்தலாகப் பந்து வீசியதால் இந்திய வீரர்கள் அரை சதம் எடுக்கமுடியாமல் திணறினர். 48.2 ஓவர்களில் பிசிசிஐ தலைவர் லெவன் அணி 244 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 103 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.