இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி கொல்கத்தா புறப்பட்டு சென்ற வீரர்கள்!

1314

சென்னையிலிருந்து இந்திய-ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் வீரர்கள் விமானம் மூலம் கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளிலும், 3 டி20 போட்டிகளிலும் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று 1க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக இந்திய-ஆஸ்திரேலிய வீரர்கள் விமானம் மூலம் கொல்கத்தாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். 21ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற தீவிரம் காட்டும் என்பதால், விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.