ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி…

87

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்று சாதனைப் படைத்தது. இதனால் அணியின் வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஊக்கத்தொகை ஒவ்வொரு வீரர்களும் போட்டியில் வாங்கும் சம்பளத்திற்கு சமமான அளவில் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்த வீரர்களுக்கு ஒவ்வொரு போட்டியிலும் தலா 15 லட்சம் ரூபாயும், ஆடும் லெவனில் இடம்பெறாத வீரர்களுக்கு தலா 7.5 லட்சம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படுகிறது. பயிற்சியாளர் ஒவ்வொருவருக்கும் தலா 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், பயிற்சியாளர்கள் அல்லாத உதவியாளர்களுக்கு சம்பளம் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.