இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

273

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே 2வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 196 ரன்களுக்கு சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில்
500 ரன்களும் எடுத்து முன்னிலை வகித்தது. 2வது இன்னிங்சை வெஸ்ட் இண்டீஸ் ஆடிய நிலையில், மழை குறுக்கிட்டதால் நான்காம் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மேலும், இந்திய வீரர்களின் அபார பந்து வீச்சும் வெஸ்ட் இண்டீசை பதம் பார்த்தது. அஷ்வின் சுழலில் பிளாக்வுட் 63 ரன்களும் , ராஸ்டன் சோஸ் 137 ரன்களும் எடுத்திருந்தனர். இதனையடுத்து 2வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுக்கு 388 ரன்கள் எடுத்திருந்த போது, இந்திய அணி 84 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. இதையடுத்து 2வது டெஸ்டை டிரா செய்ய இரு அணிகளின் கேப்டன்களும் முன் வந்தனர். இதையடுத்து போட்டி டிரா ஆனது. 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.