இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி வருகிறது.

181

இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிதானமாக விளையாடி வருகிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் குக் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் கூக் மற்றும் ஜென்னிங்ஸ் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்ததடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய வீரர்கள் 233/3 ரன்களில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.