இந்தியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹெராத் விலகல்

770

இந்திய அணிக்கு எதிரான மூன்றவது டெஸ்ட் போட்டியில் இருந்து இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் விலகியுள்ளார்.
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்த நிலையில் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து 3வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 2ம் தேதி டெல்லியில் துவங்குகிறது. இந்த போட்டியில் இருந்து இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் இலங்கை அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹெராத்துக்கு பதில் அறிமுக வீரர் ஜெப்ரி வாண்டர்சே பங்கேற்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.