இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று ஆட்ட நேர இறுதியில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்து இருந்தது.
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நேற்று முன் தினம் தொடங்கியது. மழை காரணமாக முதல் இரண்டு நாள் ஆட்டங்கள் பாதிக்கப்பட்டன. மூன்றாவது நாளான இன்று இந்திய அணி 59.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ரன்களை எடுத்தது.
இதையடுத்து முதல் இன்னிங்சை விளையாட தொடங்கிய இலங்கை அணி, 45.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை எடுத்தது. லகிரு திருமனே மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் எடுத்தனர்.