ஆசிய விளையாட்டு போட்டியில், 9 தங்கம் உட்பட 50 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா 8 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியில், ஆண்கள் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் மஞ்சித் சிங் தங்கம் வென்றார். இதே போட்டியில் 2-வதாக வந்த இந்தியாவின் ஜின்சன் ஜான்சன் வெள்ளி வென்றார். இதேபோன்று இருபாலர் தொடர் ஓட்டத்தில், இந்தியாவின் முகமது அனாஸ், பூவம்மா ராஜூ, ராஜிவ் ஆரோக்கியா, ஹிமா தாஸ் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். இதன் மூலம் 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் என 50 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா 8 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதேபோல் முன்னதாக நடைபெற்ற வில்வித்தை போட்டியில் இந்திய மகளிர் அணி சார்பாக பங்கேற்ற மதுமிதா குமாரி, முஷ்கன் கிரார், கோதி வென்னம் ஆகியோர் அடங்கிய குழு வெள்ளிப்பதக்கம் வென்றது. இதேபோன்று, ஆண்கள் பிரிவில் அபிஷேக் வர்மா, அமன் சைனி, ராஜ் சவுஹான் ஆகியோர் அடங்கிய குழு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது.