உலகில் முதன்முறையாக 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

229

உலகில் முதன்முறையாக 104 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் செலுத்த PSLV மற்றும் GSLV ஆகிய ராக்கெட்டுகளையும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தயாரித்து வருகிறது. இந்த ராக்கெட்டுகள் மூலம் இதுவரை இஸ்ரோ 121 செயற்கைகோள்களை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி உள்ளது. இந்நிலையில், தற்போது 104 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 664 கிலோ எடை கொண்ட 104 செயற்கைகோள்களுடன் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.
ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையில் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இருப்பது இதுவே முதன் முறையாகும். எந்த ஒரு நாடும் செய்யாத இந்த சாதனையை வெற்றிகரமாக செய்து இஸ்ரோ விண்ணில் சாதனை படைத்துள்ளனர்.