இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு சர்வதேவ அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

170

இந்தியா-ரஷ்யா இடையேயான உறவு சர்வதேவ அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கோவாவில் நடைபெற்ற இந்திய-ரஷ்ய வருடாந்திர கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பின் போது பல ஆக்கப்பூர்வமான விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். தீவிரவாதத்தை ஆதரிப்பவர்களை எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ள முடியாது என கூறிய அவர், எல்லை தாண்டிய தீவிரவாதத்தின் வேதனையை ரஷ்யாவும் உணர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். ஆப்கான் மற்றும் மேற்கு ஆசிய விவகாரங்களில் இந்தியா- ரஷ்யா இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக கூறிய பிரதமர் மோடி, கூடங்குளம் அணுஉலை இந்தியா-ரஷ்யா இடையேயான நல்லுறவின் வெளிப்பாடு என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார். புதிய இரண்டு நண்பர்களை விட பழைய ஒரு நண்பர் மிகவும் முக்கியமானவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.