இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை நாடு கடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

320

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா முஸ்லீம் அகதிகளை நாடு கடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மியான்மாரில் வசிந்து வந்த ரோஹிங்கியா முஸ்லீம்கள், 1982 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மியான்மர் குடியுரிமைச் சட்டத்தின் படி, அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்க தேசத்திலிருந்து வந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்று மியான்மர் அரசு குற்றம்சாட்டியது. இதன் காரணமாக மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லீம்களை குறிவைத்து கலவரங்கள், தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன. இதனால் ரோஹிங்கியா முஸ்லீம்கள் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குத் தஞ்சம் அடைந்தனர். இந்தியாவில் வசித்து வரும் 14 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் மட்டுமே ஐ.நா.அகதிகள் ஆணையத்திடம் பதிவு செய்துள்ளனர். ஆனால், சட்ட விரோதமாக சுமார் 40 ஆயிரம் ரோஹிங்கியா அகதிகள் இந்தியாவில் வசித்து வருவதால் அவர்களை நாடு கடத்த, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.