காமன்வெல்த் போட்டி : 15 பதக்கங்களுடன் இந்தியா 3ஆம் இடத்திற்கு முன்னேற்றம் ..!

269

காமன்வெல்த் ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கி சுடும்போட்டியில் இந்திய வீரர் ஜீத்துராய் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்…
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பளு தூக்கும் வீரர்கள் தங்களின் திறமையால் தேசத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் 5வது நாளான இன்று 105 கிலோ பளு தூக்கும் பிரிவில் பர்தீப் சிங் வெள்ளி வென்று இந்தியாவின் பதக்கப் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

இதேபோல் ஆடவர் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் ஜீத்துராய் தங்கமும், ஓம் மிதர்வால் வெண்கலமும் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
இதன் மூலம் 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் இந்தியா 3ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதேசமயம் ஆஸ்திரேலியா 31 தங்கம் உட்பட 85 பதக்கங்களுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது.