பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் இந்தியா!

160

காஷ்மீர் மற்றும் பஞ்சாப் எல்லையில் இந்திய போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் பகுதியையொட்டிய எல்லை கோட்டு கட்டுப்பாடுக்கு அருகே நேற்று முன்தினம் பாகிஸ்தானின் போர் விமானங்கள் பறந்தன. மேலும் அந்த விமானங்கள் எல்லை அருகே பறந்ததை இந்திய ரேடார்கள் படம் பிடித்தன. இதனையடுத்து இந்திய விமானப்படையும், பாதுகாப்பு படையும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் இந்திய விமானப்படை போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. ஜெட் ரக விமானங்களை அதிவேகத்தில் இயக்கி ஒத்திகையில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அமிர்தசரஸ் பகுதியில் ஏராளமான போர் விமானங்கள் பறந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.