இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு..!

1233

இந்தியா- பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேச உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லைப்பிரச்சனை, பங்கரவாதம் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்து வருகிறது. இரு நாடுகளும் பரம எதிரிகளாக இருந்து வரும் நிலையில், அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புவதாக இந்தியா தெரிவித்திருந்தது. குறிப்பாக பதான்கோட் பிரச்சினை, குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனை விதித்த விவகாரம், அத்துமீறிய தாக்குதல்கள் போன்றவைகள் தீர்க்க படாமல் முடங்கி கிடந்தன. இதனிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இந்தியவுடன் சுமூக பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

பாகிஸ்தானின் இந்த கோரிக்கையை இந்தியாவும் ஏற்றுக்கொண்டது. இந்தநிலையில், நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐநா பொதுச்சபை கூட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. இருநாட்டு பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.