இந்தியா – நேபாளம் இடையே பேருந்து – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

1973

இந்தியா – நேபாளம் இடையே பேருந்து சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இருநாட்டு நல்லுறவில் புதிய அத்தியாயம் மலர்ந்து இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்ற பிரதமர் மோடிக்கு, ஜனக்பூரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஜானகி கோவிலுக்கு சென்ற மோடியை நேபாள பிரதமர் ஷர்மா ஒலி வரவேற்றார். பின்னர் இருவரும் சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, ஜனக்பூரில் இருந்து உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு நேரடி பேருந்து சேவையை மோடி தொடங்கி வைத்தார்.

விழாவில் உரையாற்றிய நேபாள பிரதமர் ஒலி, சீதை பிறந்த ஜனக்புரி, இந்திய கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை சுட்டிக் காட்டினார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இராமாயணத்தில் கூறப்பட்டுள்ள ஜனக்புரி, அயோத்தி இடையே பேருந்து சேவை தொடங்கி இருப்பது இருநாட்டு நல்லுறவில் புதிய அத்தியாயத்தை மலரச் செய்து இருப்பதாக தெரிவித்தார்.