உலகக்கோப்பை வெல்லும் வாய்ப்பை இழந்த இந்தியா..!

147

இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து,இறுதி போட்டி வாய்ப்பை இழந்தது.

உலகக் கோப்பை தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில்,முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 239 ரன்கள் எடுத்தது.240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆட துவங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு சரிவது போல் சரிந்தன.குறிப்பாக கோலி ,ரோஹித் சர்மா,ராகுல் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் 1 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தினர்.ஒரு கட்டத்தில் இந்திய அணி 96 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து உறைந்த நின்றது.இதைத்தொடர்ந்து விளையாடிய ரவீந்திர ஜடேஜா ,மஹேந்திர சிங் இணை இந்திய அணியின் ரன் விகிதத்தை கிடு கிடு வென ஏற்றினர்.நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடிய ஜடேஜா 77 ரன்கள் குவித்தார்.ஜடேஜா அவுட்டானதை தொடர்ந்து தோனியும் 50 ரன்களில் அவுட் ஆனார்.அடுத்து வந்த வீரர்களும் வந்த வேகத்தில் திரும்பியதால் நியூசிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .இதையடுத்து இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மேட் ஹென்றி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.