இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் கடற்படைகளுக்கு சொந்தமான 22 கப்பல்களின் கூட்டுப்பயிற்சி இன்று தொடங்கியது.

304

இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் கடற்படைகளுக்கு சொந்தமான 22 கப்பல்களின் கூட்டுப்பயிற்சி இன்று தொடங்கியது.
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய 3 நாடுகள் இணைந்து ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சியை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், 2–வது முறையாக வங்கக்கடலில் சென்னை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள கடற்பகுதிகளில் 2 கட்டமாக பயிற்சி நடக்கிறது. கடந்த 7–ந் தேதி கேரள மாநிலம் கொச்சி கடல் பகுதியில் தொடங்கிய இந்த கடல் பயிற்சி வருகிற 17–ந் தேதி வரை நடக்கிறது. அந்த வகையில் சென்னைக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் கூட்டு கடற்பயிற்சி இன்று தொடங்கியது.
சென்னையில் 3 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சியில் மூன்று நாடுகளை சேர்ந்த 22 போர் கப்பல்கள் பங்கேற்கின்றன. இந்த பயிற்சியில் ரோந்துப்பணி, நீர்மூழ்கி கப்பல் போர் பயிற்சி, மருத்துவ நடவடிக்கைகள், ஹெலிகாப்டர்களை இயக்குவது, கடலில் மிதக்கும் வெடி பொருட்களை கண்டுபிடித்து அழிப்பது, தேடல் மற்றும் பறிமுதல் தொடர்பான பயிற்சிகளில் ஈடுபட உள்ளனர்.