இந்திய ராணுவத்தை மேம்படுத்த ரூ.40 ஆயிரம் கோடிக்கு நவீன ஆயுதங்கள் வாங்க முடிவு!

222

இந்திய ராணுவத்தை மேம்படுத்தப்படுத்தும் விதமாக, 40 ஆயிரம் கோடிக்கு நவீன ஆயுதங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்படும் என்றும், எல்லை பகுதிகளை கண்காணிக்க நவீன சாதனங்கள் வாங்கப்படும் என்றும் கூறினார். அதன் அடிப்படையில் 7 லட்சம் துப்பாக்கிகள், 44 ஆயிரம் இயந்திர துப்பாக்கிகள், 44 ஆயிரத்து 600 சிறிய ரக துப்பாக்கிகள் மற்றும் 10 ஆயிரம் எடை குறைந்த துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய இருப்பதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆயுதங்கள் 40 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ராணுவத்தை நவீனப்படுத்தப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.