உலகளவில் பட்டினி நாடுகளின் பட்டியலில், இந்தியா 97வது இடத்தில் உள்ளது.

148

உலகளவில் பட்டினி நாடுகளின் பட்டியலில், இந்தியா 97வது இடத்தில் உள்ளது.
உலக அளவில் வளரும் நாடுகளில், ஆண்டுதோறும் பட்டினி நாடுகளின் பட்டியல் வெளியிடுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பட்டினி நாடுகளின் பட்டியலில் , இந்தியா 97வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 15 சதவீதம் பேர் சாப்பிடும் உணவு தரம் மற்றும் அளவில் பற்றாக்குறை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உயிரிழப்பு 4.8 சதவீதமாகவும், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் விகிதம் 39 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவை விட, எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பட்டினியால், அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2000 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உலக அளவில் பட்டினி விகிதம் 29 சதவீதம் குறைந்துள்ளது.