இந்தியா மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

255

இந்தியா மற்றும் நேபாளத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவின் அசாம், மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் இன்று காலை 1.45 மணிக்கு, சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது. இதேபோன்று நேபாளின் காத்மாண்டு பகுதியிலும் இன்று காலை 6.14 மணிக்கு, நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நிலநடுக்கத்தால் உண்டான பாதிப்புகள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.