இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையேயான டெஸ்ட் : முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 311 ரன்கள்

762

இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரோஸ்டன் சேஸ்-இன் அபார சதத்தால், மேற்கிந்திய தீவுகள் அணி 311 ரன்கள் குவித்தது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஐதராபாத்தில் 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. தொடக்கத்தில் அந்த அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. ஆனால் ரோஸ்டன் சேஸ் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அவருக்கு அணியின் கேப்டன் ஹோல்டன் துணை நின்று அரை சதம் கடந்தார்.

இதனையடுத்து அந்த அணி 101 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.