இந்தியா – கனடா இடையே ஆறு முக்கிய ஒப்பந்தங்களை கையெழுத்தான நிலையில், இரு நாடுகளுக்கும் தீவிரவாதமும், பிரிவினைவாதமும் அச்சுறுத்தலாக இருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, இந்தியா – கனடா இடையே ஆறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதைத்தொடர்ந்து, இருதலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் பயங்கரவாதமும். பிரிவினைவாதமும் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, அவற்றை எதிர்த்து ஒன்றாக இணைந்து போராடுவது அவசியம் என்றார். இந்தியாவை சேர்ந்த 1 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் கனடாவில் படித்து வருவதை அவர் சுட்டிக் காட்டினார். வணிக ஒத்துழைப்பில் கனடாவின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா திகழ்ந்து வருவதாக பாராட்டு தெரிவித்த ஜஸ்டின் டுரூடோ, பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தியாவில் தொழில் துவங்க புதிய வாய்ப்புகளை கனடா எதிர்நோக்கி இருப்பதாக அவர் தெரிவித்தார்.