இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடைபெறுகிறது!

358

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று ஐதராபாத் நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை 1க்கு 4 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து மூன்று 20 ஓவர் போட்டிகளில் அந்த அணி விளையாடிவருகிறது. இரண்டு போட்டிகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் வெற்றி பெற்ற நிலையில், தொடர் யாருக்கான மூன்றாவது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது. தொடரை கைப்பற்ற இரு அணிகள் வீரர்களும் கடுமையாக போராடுவார்கள் என்பதால், போட்டி சுவாரஷ்யமாக இருக்கும். இந்திய மனிஷ் பாண்டேவுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் அல்லது லோகேஷ் ராகுல் சேர்க்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஐதராபாத்தில் மழை பெய்து வருவதால், ஆட்டம் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.