இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பதற்காக, அமெரிக்காவின் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி 50 லட்சம் டாலர் லஞ்சம் பெற்றதாக, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பரபரப்பு குற்றம் சாட்டியுள்ளார்.

277

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளர் லாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹிலாரி பற்றி 50 உண்மைகள் என்ற தலைப்பில், டொனால்ட் டிரம்ப், 35 பக்கங்கள் கொண்ட சிறிய புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஹிலாரி கிளிண்டன் மீது டிரம்ப் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
அதில், இந்திய-அமெரிக்க சிவில் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிப்பதற்கு இந்திய அரசியல் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருந்து ஹிலாரி கிளின்டன் 50 லட்சம் டாலர் லஞ்சம் பெற்றார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சிவில் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவு கோருவதற்காக, சமாஜ்வாடி எம்.பி. அமர்சிங் அமெரிக்கா வந்தார் என்றும், அப்போது, ஜனநாயக கட்சி எம்.பி.யாக இருந்த ஹிலாரி கிளின்டன், தனது கட்சியினர் சிவில் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முட்டுக்கட்டை போட மாட்டார்கள் என்று உறுதி அளித்திருந்தார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், டொனாலட் டிரம்ப் அடுக்கியுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஹிலாரி மறுத்துள்ளார்.