இந்தியா-நியூசி. அணிகளுக்கு இடையே இரண்டாவது 20 ஓவர் போட்டி | 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி

192

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 4-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி புதிய சாதனை படைத்தது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. வெல்லிங்டனில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 80 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த நிலையில், இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்து முதலில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் அந்த அணி 8 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி, என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 18 புள்ளி 5 ஓவர் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம்,1 க்கு 1 என்ற கணக்கில் இரண்டு அணிகளும் சமநிலை வகிக்கிறது.