ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் துப்பாக்கி சூடு : தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் மரணம்

121

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் உடல் அவரது சொந்த ஊரான நாசிக்கில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரஜோவுரி மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாகிஸ்தான் தரப்பில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதற்கு இந்திய தரப்பில் இருந்தும் பதிலடி கொடுக்கப்பட்டது. எனினும் இந்த சம்பவத்தில் இந்திய வீரர் கோசவி கேஷவ் சோம்கிர் மரணம் அடைந்தார்.

அவரது உடல் மகாராஸ்டிர மாநிலம் நாசிக் கொண்டு செல்லபட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. 29 வயதான ராணுவ வீரருக்கு மனைவி உள்ளார்.