இந்தியா வந்தார் ஆப்கானிஸ்தான் அதிபர்..!

1090

பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி டெல்லிக்கு வருகை தந்துள்ளார்.

கடந்த வாரம் காபூலுக்கு சென்ற இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் ஆப்கானிஸ்தான் அதிபர் கானி இந்தியாவுக்கு வர வேண்டும் என அழைப்புவிடுத்தார். இதனை ஏற்று இன்று டெல்லி வந்துள்ள அதிபர் கானி, மதிய உணவுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து இருநாட்டு உறவை மேம்படுத்துவது குறித்து பேசுகிறார். அப்போது தாலிபான் இயக்கத்துடன் மேற்கொள்ள வேண்டிய அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாகவும் இருவரும் விவாதிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.