ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை – நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல்கட்சிகள் எதிர்ப்பு

161

மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையை கொண்டு வந்த பா.ஜ.க அரசு. இதன்மூலம் தேர்தல் செலவுகள் குறைக்கப்படும் எனவும் குறிப்பிட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள அரசியல்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை மூலம் மக்களின் வரிப்பணம் மிச்சமாகும் எனவும், காஷ்மீரை தவிர அனைத்து மாநிலங்களிலும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை நடத்தலாம் எனவும் சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு அரசியல் சாசனப் பிரிவு 172-ஐ திருத்தம் செய்யாமல் சாத்தியமில்லை எனவும் சட்ட ஆணையம் குறிப்பிட்டுள்ளது.