சீன ராணுவம் வெளியேற வேண்டும் என இந்தியா எச்சரிக்கை..!

630

இந்திய எல்லைக்குள் சீனா மீண்டும் அத்துமீறி ஊடுருவியிருப்பது, லடாக் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இந்திய – பூடான் எல்லைப்பகுதியில் உள்ள டோக்லாம் என்ற இடத்தில் சீனா சாலை அமைக்க முயன்றது. இந்திய ராணுவம் அதனை தடுத்து நிறுத்தியதை அடுத்து, பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து, இந்திய – சீன உயர் அதிகாரிகள் சந்தித்து பேசியதை அடுத்து, இந்த விவகாரத்தில் அமைதி ஏற்பட்டது.
இந்த நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சாக் செக்டாரில் சுமார் 300-400 மீட்டர் தொலைவுக்கு ஊடுருவிய சீன ராணுவம், 5 கொட்டகைகளை அமைத்துள்ளது.

இருதரப்பு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, 3 கொட்டகைகளை சீன ராணுவம் அகற்றி உள்ளதாகவும், மீதமுள்ள இரண்டு கொட்டகைகளில் சீன வீரர்கள் இன்னும் தங்கியிருப்பதாகவும் பாதுகாப்புத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத்தொடர்ந்து, கொட்டகைகளை அகற்றிவிட்டு, டெம்சாக் பகுதியில் இருந்து சீன வீரர்கள் வெளியேற வேண்டும் என இந்திய ராணுவம் எச்சரித்துள்ளதை அடுத்து, அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.