அடுத்தடுத்து தோல்விகளை தழுவி வரும் இந்திய அணி..!

453

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தினேஷ் கார்த்திக்கை நீக்கிவிட்டு ரிஷப் பாண்டை சேர்க்கலாம் என முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி யோசனை தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி, அடுத்து நடைபெற்ற 2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி, ஷிகர் தவான் மீண்டும் அணியில் சேர்க்கப்படலாம் என்றார். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மிக மோசமான பார்மில் இருப்பதாக கூறிய அவர், வலைப்பயிற்சியில் கூட அவரால் பந்தை அடிக்க முடியவில்லை என்றார். ஒரு இடது கை வீரர் அணிக்குத் தேவைப்படுவதாகவும், தினேஷ் கார்த்திக்கை நீக்கி விட்டு, இளம் வீரர் ரிஷப் பாண்டை அணியில் சேர்க்கலாம் என யோசனை கூறினார்.