இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டதால், இரண்டாவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால் 13 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி அதிர்ச்சி அளித்தது.

தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி, ரஹானே உள்ளிட்ட வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி முதல் இன்னிங்சில் 35 புள்ளி 2 ஓவரில் 107 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. அதிகபட்சமாக அஸ்வின் 29 ரன்களை எடுத்தார்.