சென்னையில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம்..!

181

சென்னையில் உள்ள ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி 72 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னையில் உள்ள கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி உரையாற்றுகிறார். இந்த சுதந்திர தின விழாவில் வீர தீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படும். இதற்காக தலைமை செயலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோட்டை கொத்தளத்திற்கு எதிரே, பார்வையாளர்கள் அமர்வதற்கு, பந்தல் அமைக்கும் பணி, நடந்து வருகிறது. கொடிக் கம்பத்திற்கு வண்ணம் பூச, சாரம் அமைக்கும் பணி, மின் விளக்குகள் பொருத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.ஜெயலலிதா இருந்த போதும், அவரது மறைவுக்கு பின்னும் 3 முறை முதலமைச்சராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வதற்கு இதுவரை சுதந்திர தின விழாவில் கொடியேற்ற வாய்ப்பு கிடைத்ததில்லை. ஆனால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பதவியேற்று இரண்டாவது வருடமாக சுதந்திர தின விழாவில் கொடியேற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.