இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான இருபது ஓவர் தொடரில் 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் இன்று நடைபெறுகிறது

310

ஹராரேவில் நடைபெற்று இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த ஆட்டத்தில் வென்று தொடரைக் கைப்பற்றுவதில் இருஅணிகளும் தீவிரமாக உள்ளன.
முதல் ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய அணி, 2-ஆவது ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது. இதனால் புதிய நம்பிக்கை பெற்றுள்ள இந்திய அணி, இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிம்பாப்வே அணியைப் பொறுத்தவரையில் பேட்டிங், பெளலிங் என இரண்டிலுமே பலவீனமாக உள்ளது. அந்த அணியின் எந்தவொரு வீரரும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
இருஅணிகளுக்கிடையிலான ஆட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை நான்கரை மணிக்கு ஹராரேவில் தொடங்குகிறது.