ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

415

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்தூரில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 293 ரன்களை அந்த அணி குவித்தது. சிறப்பாக விளையாடிய ஆரோன் பின்ச் 124 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து 294 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டகாரர்கள் ரோகித் மற்றும் ரஹானே அரைசதம் கடந்து ரன்களை உயர்த்தினர். இதையடுத்து களமிறங்கிய பாண்டியா அதிரடியாக விளையாடி 78 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 47புள்ளி 5 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வென்றதன் மூலம் தொடரை கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்ததுள்ளது.