இந்தியா – மேற்கிந்திய தீவு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது..!

155

இந்தியா – மேற்கிந்திய தீவு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் கயானாவில் நடந்த முதலாவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் இன்று நடக்கிறது. 20 ஒவர்கள் தொடரை இழந்த மேற்கிந்திய தீவு அணி, தனது வெற்றியை தொடருமா அல்லது இந்தியாவிடம் பணிந்து செல்லுமா என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.