இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் இன்று தொடக்கம்.

567

இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுன் நியூலேண்ட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

தொடரை கைப்பற்ற வேண்டும் என தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தென்னாப்பிரிக்க ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருக்கும் என்பதால், இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். இந்த நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி அணிக்கு வெற்றியை தேடி தருவார்களா? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் இருக்கும் தென்னாப்பிரிக்க அணி, சொந்த மண்ணில் அபாரமாக ஆடும் என்பதில் ஐயமில்லை.
இந்திய அணி தென் ஆப்பிரிக்க மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றது இல்லை. இதனால் முதல் முறையாக தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.