மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தி, இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

201

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தி, இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக மிதாலி ராஜ் 109 ரன்கள் குவித்தார். 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து வீராங்கனைகள் இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறினர். 25.3 ஓவர்களில் அந்த அணி, 79 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேரிய இந்திய அணி, வலுவான ஆஸ்திரெலிய அணியை எதிர்கொள்கிறது.