உத்தரகாண்ட் மாநிலத்தில், இந்தியா ராணுவமும், அமெரிக்க ராணுவமும் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

ராணிகேட் பகுதியில் நடைபெறும் இந்த கூட்டு பயிற்சியில், இரு நாட்டு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். யூத் அபியஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பயிற்சியில் புதிய ரக துப்பாக்கிகள் பயன்பாடு குறித்து இந்திய ராணுவத்தினருக்கு அமெரிக்க வீரர்கள் ஆலோசனை வழங்கினர். பின்னர் எதிரியை எவ்வாறு மறைந்திருந்து தாக்குவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் செய்து காட்டப்பட்டன. மலை பகுதியில் நடைபெற்ற இந்த பயிற்சியின் மூலம் வீரர்களுக்கு பல்வேறு திறன்கள் மேம்படும் என மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.