வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு அளிக்கப்பட்ட கூடுதல் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

183

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு அளிக்கப்பட்ட கூடுதல் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.
மாத ஊதியம் பெறுவோர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு, 2016 – 17-ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு கடந்த ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக, ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்ததால் சர்வர் முடங்கியது. அதனால், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி, இன்று வரை நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து, சென்னை நுங்கம் பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வசதியாக, இறுதி நாளான இன்று, நாட்டில் உள்ள வருமானவரித்துறை அலுவலகங்கள் இரவு 12 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவோர், ஆதார் எண்ணுடன் – பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற சூழலில், ஆதார் – பான் எண்களை இணைப்பதற்கான தேதியும், வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும், வருமான வரி தாக்கல் செய்வோர், ஆதார் எண்ணையோ அல்லது அதற்கு மனு செய்ததற்கான அத்தாட்சி ரசீதையோ இணைத்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.