வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையை அடுத்து, தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ராம மோகன் ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

214

வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனையை அடுத்து, தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ராம மோகன் ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக தலைமை செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பணம், தங்கம், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனைடுத்து, ராமமோகனராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்த நிலையில், தமிழக அரசு தலைமை செயலாளர் பொறுப்பில் இருந்து ராமமோகனராவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஆணை, தபால் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.