அமலாக்காத்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே, தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

148

அமலாக்காத்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே, தலைமை செயலாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெறுவதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையம் வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், ராம் மோகன் ராவ் வீட்டில் இன்று அதிகாலை முதல் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பாகுபாடு இன்றி அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக கூறினார். கறுப்பு பணம் இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறிய நிர்மலா சீத்தாராமன், இதில் உள்அர்த்தம் எதுவும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.