மத்திய அரசின் புதிய பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

208

மத்திய அரசின் புதிய பினாமி சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
பணவிலக்க நடவடிக்கைக்கு பிறகு 87 நோட்டீசுகளை பிறப்பித்துள்ள வருமானத்துறை, பினாமி பரிவர்த்தனைகள் சட்டத்தின் கீழ் 42 வழக்குகளில் பல்கோடி மதிப்பிலான சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளது. குற்றவாளிகளுக்கு பெரிய அளவில் அபராதம் மற்றும் ஏழாண்டு கடுங்காவல் தண்டனைக்கும் இந்த சட்டம் வகை செய்கிறது. பணவிலக்க நடவடிக்கைக்குப் பிறகு, கணக்கில் காட்டப்படாத பணத்தை மற்றவரின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வதற்கு எதிராக மக்களை எச்சரிக்கும் விளம்பரங்களையும் வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது.
1988 ஆம் ஆண்டின் பினாமி பரிவர்த்தனை சட்டங்களின் கீழ் இது கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து அசையும் மற்றும் அசையா சொத்துக்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.