நாடு முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் இதுவரை கணக்கில் வராத ஆயிரம் கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

311

நவம்பர் 9 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் வருமானவரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நகை, பணம் மதிப்பு விபரங்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து வருமானவரித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கர்நாடகா மற்றும் கோவாவில் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 29.64 கோடி ரூபாய் பணமும், 40 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும், அதில் 20 கோடி புதிய ரூபாய் நோட்டுகள் என்றும் தெரிவித்துள்ளது. இன்று நடத்திய சோதனையில் மட்டும் 5.21 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை சுமார் 1000 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.