5 கோடியே 29 லட்ச ரூபாய்க்கு வருமான வரி கணக்குகள் தாக்கல் : கடந்த ஆண்டை விட 60 சதவீதம் அதிகம் என தகவல்

457

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 60 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வருமான வரி கணக்குகளைத் தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று, பெரும்பாலானோர் இணையதளம் மூலம் நள்ளிரவு 12 மணி வரை தாக்கல் செய்துள்ளனர். நடப்பாண்டைப் பொறுத்தவரை மொத்தம் 5 கோடியே 29 லட்ச ரூபாய்க்கு வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 60 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வருமானவரி கணக்கை தாக்கல் செய்யாத, 5 லட்சம் ரூபாய்க்குக் கீழ் வருமானம் இருப்போருக்கு ஆயிரம் ரூபாய் தாமதக் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மொத்த வருமானம் 5 லட்சத்துக்கு அதிகமாக இருப்பவர்கள், டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாக வருமானவரி கணக்கை தாக்கல்செய்தால், தாமதக் கட்டணமாக ஐந்தாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்தில் வருமான வரி கணக்குகள் தாக்கல்செய்ய செப்டம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.